Active Members

Geetha

சென்னையில் வசித்துவரும் கீதா, இன்ஷ்யூரன்ஸ் துறையில் பணியாற்றி வருகிறார். கேரள வெள்ள பாதிப்புக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் அன்பு பாலம் மூலம் உதவிகள் அளித்துவந்ததை அறிந்த அவர் நேரடியாக அலுவலகத்துக்கு வந்து ரூ.50,000/- ற்கான காசோலையை வழங்கினார். அவரது காசோலை கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. கேரள மக்களின் துயர் துடைக்க ஐம்பதாயிரம் ரூபாயை வழங்கிய கீதா அவர்களின் சேவை மனப்பான்மை ஆச்சரியமளிக்கும் விதத்தில் உள்ளது.

J.Prakash

தமிழ் நாடு சிறப்பு காவல் படையில் காவலராகப் பணியாற்றும் ஜெ. பிரகாஷ், 1,800 ரூபாய் மதிப்பிலான உதவிப்பொருட்களை கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்காக வழங்கி உதவினார். நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் திட்டத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

AZEES

மதுக்கரையைச் சேர்ந்த அஜீஸ், கேரள வெள்ள நிவாரணத்துக்கு உதவும் நோக்கில் 25 ஆயிரம் ரூபாய்க்கு, கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு வரைவோலை பெற்று அதை கோவையில் உள்ள நியூஸ் 7 தொலைக்காட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தார். 'அன்பு பாலம்' திட்டத்துடன் இணைந்து, தொடர்ந்து மக்கள் பணியாற்ற அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Yugendran Kamaraj K

சென்னையைச் சேர்ந்த யுகேந்திரன் காமராஜ், கேரள வெள்ள நிவாரணத்திற்காக நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் திட்டத்தின் பணிகள் குறித்துக் கேள்விப்பட்ட உடனேயே நமது அலுவலகத்துக்கு நேரில் வந்து, அவரது தந்தையுடன் இணைந்து தம்மையும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். கேரள நிவாரணத்திற்காக உதவிப்பொருட்கள் நமது அலுவலகத்தில் குவிந்ததைப் பார்த்த அவர் உடனே 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 500 கிலோ அரிசியை மனமுவந்து வாங்கி அளித்தார். துன்பத்தில் அல்லல் படும் சக மனிதனுக்கு உதவ அவர் காட்டிய வேகம் மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. வடசென்னையில் செயல்படும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு மாதம் தோறும் இது போன்ற உதவிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கும் அவர், அன்பு பாலம் திட்டத்துடன் இணைந்து மேலும் பல சமூகப் பணிகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்.